தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாட பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் சந்திப்பு

வரவு செலவுத் திட்டம் குறித்து பிரதமரும், பிரதான எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பை Conservative கட்சி உறுதிப்படுத்தியது.

Mark Carney அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, Conservative தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (22) பிரதமரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஒரு திறந்த உரையாடலாக அமைந்தது என செய்தியாளர்களிடம் பேசிய Pierre Poilievre தெரிவித்தார்.

ஆனாலும் சந்திப்பில் உரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தெரியாமல் அதை ஆதரிப்பதா அல்லது எதிப்பதா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்து விட்டார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் Mark Carney இந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டம் உட்பட்ட விடயங்களில் எதிர்க்கட்சிகளின் முன்னுரிமைகள் குறித்துப் பேசுவதற்கு இந்த சந்திப்புகளை பிரதமர் முன்னெடுக்கிறார்.

Bloc Québécois, NDP, பசுமைக் கட்சி தலைவர்களுடன் சந்திப்புகள் ஏற்கனவே நடந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

November மாதம் 4-ஆம் திகதி இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் வரிகளால் பெருமளவில் ஏற்பட்ட பரவலான பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

இதில் செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னுரிமை பெறும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மை Liberal அரசாங்கம், இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று வாக்குகள் குறைவான நிலை உள்ளது.

இதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலை தோன்றியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக அமைகிறது.

இந்த வாக்கெடுப்பில் Mark Carney அரசாங்கம் தோற்றால், அது ஒரு பொதுத் தேர்தலை தூண்டக்கூடிய சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Related posts

கனடிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Scarborough-வில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் அமைப்பது குறித்து Patrick Brown – பார்த்தி கந்தவேள் கலந்துரையாடல்!

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன: நீதன் ஷான் காவல்துறையில் முறைப்பாடு

Lankathas Pathmanathan

Leave a Comment