தேசியம்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்து நாடாளுமன்றில் குரலெழுப்பிய ஜுனிதா நாதன்!

இலங்கைத்தீவில் காணாமல் போன தமிழர்களை நினைவுகூர நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் குறித்து புதன்கிழமை (01) அவர் நாடாளுமன்றில் உரையாற்றினார்.

இந்தப் புதைகுழிகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட 240-க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை நேரத்தில் அவரது உரை நிகழ்ந்தது.

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உண்மை, நீதி, பொறுப்புக்கூறலுக்கு தகுதியானவர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் தெரிவித்தார்.

 

காணாமல் போனவர்களை நினைவு கூறவும், அவர்களின் குடும்பங்களுடன் துணையாக இருக்கவும், உண்மையும் நீதியும் தாமதிக்கப்பட முடியாது என்பதை வலியுறுத்தவும் சபையில் அவர் அழைப்பு விடுத்தார்

முன்னாள் Markham நகரசபையின் ஏழாம் வட்டார உறுப்பினரான ஜுனிதா நாதன், கடந்த April மாதம் நடைபெற்ற மத்திய தேர்தலில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்.

Related posts

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்?

Lankathas Pathmanathan

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பாடு!

Lankathas Pathmanathan

Leave a Comment