Speed camera தடைக்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு Ontario அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கடிதத்தில் 22 நகராட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
Speed camera பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை தனது அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என Ontario முதல்வர் Doug Ford கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில் தடைக்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு Ontario அரசிடம் வலியுறுத்தப்படுகிறது.
Ontario முழுவதும் உள்ள நகராட்சிகளை சேர்ந்த இருபது நகர முதல்வர்கள், ஒரு துணை நகர முதல்வர் உள்ளிட்டவர்கள் இதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டத்தை இரத்து செய்வதற்கான செலவுகளை அனைத்து நகர சபைகளுக்கும் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்படுகிறது.
