தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி அடுத்த வாரம் சந்திப்பு!

கனடிய பிரதமர் Mark Carney அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

Mark Carney திங்கட்கிழமை (06) அமெரிக்கா பயணிக்கின்றார்.

இந்தப் பயணத்தின் போது Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பை செவ்வாய்க்கிழமை (07) சந்திக்கவுள்ளார்.

பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.

பிரதமரின் இந்தப் பயணம் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய பொருளாதார, பாதுகாப்பு உறவில் முன்னுரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரான பின்னர் Mark Carney அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பது இது இரண்டாவது தடவையாகும்.

October 14-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும், softwood lumber இறக்குமதிகளுக்கு 10 சதவீத வரியையும், அலுமாரிகள், தளபாடங்கள் மீது 25 சதவீத வரியையும் இந்த வார ஆரம்பத்தில் Donald Trump விதித்தார்.

Donald Trump தொடர்ந்து கனடிய வணிகங்களைப் பாதிக்கும் புதிய வரிகளை விதித்து வரும் நிலையில், தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளிடமிருந்தும் Mark Carney அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

கனடா-அமெரிக்கா-Mexico ஒப்பந்தத்தின் மறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையிலும், Tariffs குறித்து கனடிய அமெரிக்க அதிகாரிகள் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கும் நிலையிலும் இந்தப் பயணம் அமைகிறது.

வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், தொழில்துறை அமைச்சர் Melanie Joly, கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc ஆகியோரும் இந்த பயணத்தில் Mark Carney-யுடன் இணைகின்றனர்.

Related posts

உக்ரைனில் நிகழும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Putin பொறுப்பு: உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட Trudeau தெரிவிப்பு

Lankathas Pathmanathan

கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு கனேடிய குழு பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment