September 29, 2026
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினரை பதவி விலக வலியுறுத்தல்

Ontario மாகாண சபை உறுப்பினர் Michael Mantha பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Algoma-Manitoulin தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Michael Mantha விலக வேண்டும் என புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் தொகுதி கட்சி உறுப்பினர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு முன்னாள் ஊழியரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது ஒரு விசாரணையின் மூலம் தெரியவந்ததை அடுத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இது குறித்த குற்றச்சாட்டு வெளியான பின்னர் புதிய ஜனநாயக கட்சியில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

தொடர்ந்து சுயேட்சை உறுப்பினராக செயல்பட்டு வரும் அவரை, பதவி விலக கட்சியின் தேர்தல் தொகுதி கட்சி உறுப்பினர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

கனடிய பிரதமர், சீன ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு!

Lankathas Pathmanathan

மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தம்!

Lankathas Pathmanathan

இஸ்ரேலுடனான உறவை மதிப்பீடு செய்கிறோம்: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

Leave a Comment