தேசியம்
செய்திகள்

மீண்டும் Toronto நகரசபைக்கு தெரிவானார் நீதன் சான்!

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் தமிழரான நீதன் சான் வெற்றி பெற்று Toronto நகரசபை உறுப்பினரானார்.

திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று மீண்டும் நகரசபை உறுப்பினரானார்.

இந்த இடைத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களான அனிதா ஆனந்தராஜன், நீதன் சான், சியான் சின்னராஜா, அனு ஸ்ரீஸ்கந்தராஜா உள்ளிட்ட 20 பேர் போட்டியிட்டனர்.

Toronto நகர தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி இந்தத் தேர்தலில் நீதன் சான் 5174  வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதில் தமிழ் வேட்பாளர் அனு ஸ்ரீஸ்கந்தராஜா 3374, சியான் சின்னராஜா 1441, அனிதா ஆனந்தராஜன் 507 வாக்குகளை பெற்றுள்ளனர்.

Scarborough-Rouge Park தொகுதிக்கான நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

Related posts

முதல் பெண் சபாநாயகர் தெரிவு!

Lankathas Pathmanathan

Toronto நகர சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan

கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் அமெரிக்கா!

Gaya Raja

Leave a Comment