தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் மெக்சிகோ ஜனாதிபதி அடுத்த வாரம் சந்திப்பு

கனடா – மெக்சிகோ நாடுகளின் தலைவர்கள் விரைவில் சந்தித்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளனர்.

மெக்சிகோ ஜனாதிபதி Claudia Sheinbaum கனடிய பிரதமர் Mark Carney-யை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக Claudia Sheinbaum வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

Claudia Sheinbaum – Mark Carney ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு  அடுத்த வாரம் வியாழக்கிழமை (18) நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரில் இருந்து தங்கள் பொருளாதாரங்களை பாதுகாக்க இரு நாடுகளும் முயற்சிக்கும் நிலையில், அடுத்த வாரம் கனடா – மெக்சிகோ நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.

கடந்த மாதம், கனடிய நிதியமைச்சர் Francois-Philippe Champagne, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் மெக்சிகோ நகரில் சந்திப்புகளை முன்னெடுத்தனர்.

Related posts

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை தவற விட்ட Trudeau!

Gaya Raja

நெடுந்தெரு 401இன் கீழ் 60 KM சுரங்கப் பாதை?

Lankathas Pathmanathan

புதிய தனிமைப்படுத்தல் விதி விலக்கிலிருந்து கனேடியர்களை விலக்கும் நாடுகள்!

Gaya Raja

Leave a Comment