தேசியம்
செய்திகள்

Ontarioவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய பரிசோதனை ஆரம்பம்

விமானம் மூலம் Ontario மாகாணத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய COVID சோதனை இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியது.

தொற்றின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தக் கட்டாய சோதனையை அமல்படுத்த Doug Ford அரசாங்கம் முடிவுசெய்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை மாகாண முதல்வர் Ford வெளியிட்டிருந்தார். இன்று Peason சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடா வரும் பயணிகள் இந்தக் கட்டாய சோதனையை எதிர்கொண்டனர்.

இந்த நடைமுறை விரைவில் அமெரிக்காவிற்கும் Ontario மாகாணத்திற்கும் இடையிலான நில எல்லைக் கடப்புகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan

ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!