தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பிரச்சினைகள் குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் இன்று (திங்கள்) கலைந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பின்னர் கனடிய பிரதமர் Justin Trudeau அவருடன் முதல் தடவையாக இன்று உரையாடினார். இன்றைய தொலைப்பேசி உரையாடலில் அமெரிக்க பொருட்களை மாத்திரம் வாங்கக் கோரும் அமெரிக்காவின் புதிய கொள்கை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இன்றைய அழைப்பில் ஜனநாயகக் கொள்கைகளின் மையம், துப்பாக்கி கடத்தல், பாலின அடிப்படையிலான வன்முறை, இரண்டு கனடியர்களை தொடர்ந்து சீன காவலில் வைத்திருப்பது உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் Joe Bidenனுக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று குறித்தும் இன்று உரையாடப்பட்டுள்ளது. ஆனாலும் COVID தொற்றின் பரவலுக்கும், புதிய இறுக்கமான பயண நடவடிக்கைகளுக்கும் மத்தியில் இந்த சந்திப்பு ஒரு மெய்நிகர் சந்திப்பாக அமையும் என கூறப்படுகின்றது.

Related posts

நாடாளுமன்றத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் பேரணி

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment