தேசியம்
செய்திகள்

British Colombia மாகாணம் முழுவதும் அவசர நிலை!

British Colombia மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடரும் காட்டுத் தீ காரணமாக மாகாணம் முழுவதும் அவசர நிலையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது

முதல்வர் David Eby வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அவசர நிலையை அறிவித்தார்.

அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புடன் காட்டுத்தீயின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து உதவிகளை பெற இந்த அவசரகால நிலை அவசியம் என முதல்வர் David Eby கூறினார்.

எமது மாகாண வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ காலம் இதுவென முதல்வர் விபரித்தார்.
British Colombia மாகாணத்தில் அவசரகால நிலை தேவையற்றது என முன்னதாக அவசரகால மேலாண்மை அமைச்சர் பரிந்துரைத்திருந்தார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 11ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குள் நுழைய தடை

Lankathas Pathmanathan

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment