தேசியம்
செய்திகள்

Liberal அமைச்சரவை இந்த வாரம் சந்திப்பு

அண்மையில் மாற்றப்பட்ட Liberal அமைச்சரவை இந்த வாரம் Charlottetown நகரில் சந்திக்கின்றது.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அமைச்சரவை இந்த வாரம் Prince Edwardதீவின் தலைநகரில் கூடுகின்றது.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்திற்கு தயாராகும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

அமைச்சர்கள் தங்களுடைய அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கும் இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் Justin Trudeau கடந்த கோடை காலத்தில் அமைச்சரவை மாற்றம் ஒன்றை அறிவித்தார்.

இந்த மாற்றம் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையில் அமையும் என கூறப்பட்டது.

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் September மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகிறது.

Related posts

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan

கனடிய அமைச்சர் – அமெரிக்கப் பிரதிநிதி பேச்சுவார்த்தை?

Lankathas Pathmanathan

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment