தேசியம்
செய்திகள்

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

COVID தொற்றின் தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் இன்று (திங்கள்) Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்.

Ontario அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்தத் தொற்றாளருக்கும் பயணத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என மாகாணத்தின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி David Williams கூறினார்.

Peel பிராந்தியத்தில் வசிப்பவராக அடையாளம் காணப்பட்ட இவர், சமீபத்தில் பயணம் செய்யவில்லை எனவும் பயணம் செய்த எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது. Mississaugaவில் ஒருவரிடம் இந்தத் திரிபு கண்டறியப்பட்டதாக Peel பிராந்திய பொது சுகாதார சபை ஒரு அறிக்கையில் அறிவித்தது

இந்தத் திரிபு ஏனைய திரிபுகளை விட வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகின்றது. ஆனாலும் இந்தத் திரிபின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்குமா என்பது தெளிவாகவில்லை என தலைமை மருத்துவ அதிகாரி கூறினார். தென்னாப்பிரிக்க தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் Albertaவிலும் British Columbiaவிலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

Quebec முதல்வருக்கு COVID தொற்று

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan

Leave a Comment