தேசியம்
செய்திகள்

சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருத்தல் தொடர்புடைய பல குற்றச்சாட்டுக்களை Whitby நகரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார்.

33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவர் மீது Durham பிராந்திய காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். கடந்த வருடம் October மாதம் ஆரம்பமான விசாரணையின் எதிரொளியாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு அவை புலனாய்வாளரால் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த பகுப்பாய்வின் விளைவாக, அடையாளம் காணப்படாத பல பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். அவர்களை அடையாளம் காணும் முயற்சி தொடர்வதாக Durham காவல்துறையினர் கூறுகின்றனர். Snapchat, TikTok, Omegle, Likee, KIK Messenger உள்ளிட்ட பல இணைய பயன்பாடுகளை குறித்த சந்தேக நபர் கடந்த ஆண்டில் உபயோகித்துள்ளார்.

இவருடன் இணையத்தில் தொடர்பு கொண்ட அனைவருடனும் பேச புலனாய்வாளர்கள் விரும்புகின்றனர். இவர் மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என Whitby காவல்துறையினர் கவலை தெரிவித்தனர்

Related posts

ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை

Lankathas Pathmanathan

வாக்குறுதியளிக்கப்பட்ட 38 பில்லியன் டொலர்களை செலவழிக்க அரசாங்க துறைகள் தவறிவிட்டன

Lankathas Pathmanathan

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!