தேசியம்
செய்திகள்

கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்

கனடாவில் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா எதிர்வரும் நாட்களில் அங்கீகாரம் வழங்கும் என தெரியவருகின்றது. இதன் மூலம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக AstraZeneca மாறக்கூடும்.

October மாதம் 1ஆம் திகதி முதல் சமர்ப்பிக்கப்பட்ட AstraZeneca தடுப்பூசியின் மறுபரிசீலனை செய்து வருவதாக Health கனடா தெரிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை மதிப்பாய்வு செய்வதை அதிகாரிகள் தற்போது முடித்து வருவதாகவும் Health கனடா கூறுகின்றது. இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் AstraZeneca தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவை அதிகாரிகள் எடுப்பார்கள் என  Health கனடா தெரிவித்துள்ளது.

முதலில் December மாதம் 9ஆம் திகதி Health கனடா Pfizer-BioNTech தடுப்பூசியை அங்கீகரித்தது. இரண்டாவதாக December மாதம் 23ஆம் திகதி Moderna தயாரித்த COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது.

Related posts

மத்திய அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி!

Gaya Raja

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Gaya Raja

Leave a Comment