தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேசிய நினைவு தின நிகழ்வுகள்

தேசிய நினைவு தின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (11) நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது.

போரில் நாட்டிற்கு சேவை செய்து தங்கள் உயிரை தியாகம் செய்த கனடியர்களை நினைவு கூரும் வகையில் November 11ஆம் திகதி தேசிய நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Ottawaவாவில் நடைபெறும் நினைவு தின விழாவில் கனடிய அரசாங்கத்தை படைவீரர் விவகார அமைச்சர் Lawrence MacAulay பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

Cambodia உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் காரணமாக தேசிய நினைவு தின விழாவை பிரதமர் Justin Trudeau தவற விடவுள்ளார்.

பிரதமரின் இடத்தில் நினைவு தின விழாவில் அமைச்சர் MacAulay பங்கேற்கவுள்ளார்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ASEAN உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வியாழக்கிழமை (10) மாலை Cambodia பயணமானார்.

படை வீரர்கள் விவகாரத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காக Liberal அரசாங்கம் பல ஆண்டுகளாக விமர்சிக்கப்படும் நிலையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை படைவீரர் விவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தொடரும் விமர்சனங்களுக்கு மத்தியில் படையினருக்கு விரைவான ஆதரவை வழங்குவதில் தனது அரசாங்கம் பல முனைகளில் முன்னேறி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கும் Justin Trudeau?

Lankathas Pathmanathan

CTC அலுவலகம் மீதான தாக்குதலை கனடா TNA கண்டிப்பு

Lankathas Pathmanathan

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்கள் வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment