தேசியம்
செய்திகள்

கனடாவின் அரச தலைவரின் மறைவுக்கு தொடரும் அஞ்சலி

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கனடியர்கள் Rideau Hall இல் ஒரு இரங்கல் புத்தகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

கனடாவின் அரச தலைவரான மகாராணி எலிசபெத், தனது 96 ஆவது வயதில் வியாழக்கிழமை (08) காலமானார்.

ராணியின் ஏழு தசாப்த கால ஆட்சியின் சேவை, கடமை உணர்வை பாராட்டி, நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Ottawa நகரில் உள்ள இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் ஆலயத்திற்கு முன்பாக மலர்கள் மூலம் சிலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Ottawa நகர சபை, நாடாளுமன்றத்தில் உள்ள அமைதி கோபுரத்தில் கனடிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

Related posts

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

Lankathas Pathmanathan

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

Gaya Raja

Al-Quds தின பேரணி திட்டமிட்டபடி நடைபெறும்?

Lankathas Pathmanathan

Leave a Comment