தேசியம்
செய்திகள்

தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு!

விரைவில் நடைபெற உள்ள இரண்டு இடைத்தேர்தல்களில் போட்டியிடும் 6 தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

Scarborough-Rouge Park இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான நீதன் சான், அனு ஸ்ரீஸ்கந்தராஜா, சியான் சின்னராஜா, அனிதா ஆனந்தராஜன் ஆகியோரும், Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன் ஆகியோரும் இந்த தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.

தேசியம் ஊடக குழுமத்தினால் ஒழுங்கமைக்கப்படும் இந்த சந்திப்பு September 17-ஆம் திகதி புதன்கிழமை மாலை 7 மணி முதல் 9  மணி வரை Frontline Community Center (3031 Markham Rd #27, Scarborough, ON M1X 1L9) மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 20, 21-ஆம் திகதிகளிலும் நடைபெறுகிறது.

Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதியும், முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் குடிவரவு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?

Lankathas Pathmanathan

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment