தேசியம்
செய்திகள்

முன்னாள் நகரசபை உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மரணம்

முன்னாள் நகரசபை உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான Giorgio Mammoliti காலமானார்.

முன்னாள் அரசியல்வாதியான இவர், 2000 முதல் 2018 வரை Toronto நகரசபையின் Ward 7 York West (தற்போது Humber River–Black Creek என அழைக்கப்படும்) நகரசபை உறுப்பினராக பணியாற்றினார்.

நகரசபை உறுப்பினர் ஆவதற்கு முன்னர், அவர் Ontario சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,

அவர் 1990 முதல் 1995 வரை புதிய ஜனநாயக கட்சிக்காக மாகாண சபை உறுப்பினராக பணியாற்றினார்,

2018 நகரசபைத் தேர்தலில், Giorgio Mammoliti தோற்கடிக்கப்பட்டார்.

இதன் மூலம் அவரது நீண்ட கால நகர சபை பதவி காலம் முடிவுக்கு வந்தது.

பின்னர் அவர் 2023 -இல் மீண்டும் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

64 வயதான Giorgio Mammoliti இறந்தபோது குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தார் என அவரது மரணத்தை அறிவித்த புதல்வன் தெரிவித்தார்.

அவரது மறைவுக்கு இரங்கல்கள் வெளியாகி வருகின்றன.

Related posts

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

Gaya Raja

B.C. வீதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment