British Colombia மாகாண Conservative கட்சியின் உட்கட்சி பூசல்களும் அரசியல் குழப்பங்களும் தீவிரமடைந்துள்ளன.
British Colombia மாகாண Conservative கட்சியின் மேலும் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினர்.
தவிரவும் Conservative கட்சி தலைவர் Kerry-Lynne Findlay-யின் தலைமை அதிகாரியும் பதவி விலகினார்.
Kerry-Lynne Findlay தலைமைத்துவத்திற்கு எதிராக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மேலும் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
Boundary-Similkameen தொகுதி சட்டமன்ற உறுப்பினரான Donegal Wilson, கட்சித் தலைமை மீது தனக்கு நம்பிக்கை இழந்து விட்டதாக கூறி, புதன்கிழமை (02) ஒரு அறிக்கையில் தனது பதவி விலகலை அறிவித்தார்.
முன்னதாக Columbia River–Revelstoke தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான Scott McInnis பதவி விலகியதாக அறிவித்தார்.
கட்சியில் இருந்து விலகும் இவர்கள் இருவரும் சட்டசபையில் சுயேச்சை உறுப்பினர்களாக தொடர தீர்மானித்துள்ளனர்.
கட்சியின் கொள்கை, மாகாண நலன்களுக்கு புறம்பான செயல்பாடுகள் காரணமாக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Kerry-Lynne Findlayவுக்கு Alberta பிரிவினைவாத இயக்கங்களுடன் இருக்கும் நெருங்கிய தொடர்பு தமது பதவி விலகலுக்கு முக்கிய காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த May மாதம் Kerry-Lynne Findlay கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து, கட்சியில் இருந்து வெளியேறிய எட்டாவது, ஒன்பதாவதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்கள் ஆவார்கள்.
இந்த பதவி விலகல்கள் அனைத்தும் கடந்த மூன்று வாரங்களில் நிகழ்ந்துள்ளன.
இதுவரை கட்சியில் இருந்து விலகிய அனைவரும் சுயேச்சை உறுப்பினர்களாக தொடர தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனினும் Kamloops Centre தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Peter Milobar , Delta South தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Ian Paton ஆகியோர் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
தவிரவும் B.C. Conservative கட்சித் தலைவரின் முதன்மைப் பணியாளரும், முக்கிய அதிகாரியுமான Chris Delaney தனது பதவியில் இருந்து புதனன்று விலகினார்.
இது B.C. Conservative கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தலைமை அதிகாரியின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக Kerry-Lynne Findlay ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆனால் இந்த பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து அவர் எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் துணைத் தலைமை அதிகாரி Reann Gasper கட்சியின் புதிய தலைமை அதிகாரியாக பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார்.
அவர் Abbotsford–Mission இடைத்தேர்தலில் Kerry-Lynne Findlay போட்டியிடுவதற்காக தனது பதவியில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
B.C. Conservative கட்சியில் தொடரும் பதவி விலகல்கள், மாகாண அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
