September 17, 2026
தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் October மாதம் தாக்கல்!

பிரதமர் Mark Carney தலைமையிலான மத்திய அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் October மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் October மாதம் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்தார்.

அமெரிக்க வரிகள், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் முன்வைக்கப்படும் இந்த வரவு செலவுத் திட்டம் “கனடியர்களுக்கான ஒரு லட்சியத் திட்டம்” என Francois-Philippe Champagne விவரித்தார்.

பிரதமரும் இந்த அறிவித்தலை உறுதிப்படுத்தினார்.

இந்த வரவு செலவுத் திட்டம் குறித்த ஆலோசனைகள் July மாதம் ஆரம்பித்தது எனவும், August மாத இறுதி வரை நடைபெறும் எனவும் Francois-Philippe Champagne தெரிவித்தார்.

2028-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டு செலவினங்களை சமநிலை படுத்துவதற்கான தனது தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு பிரதமர் Mark Carney அடைவார் என்பது குறித்த கேள்விகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

கடந்த December மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலையுதிர் கால பொருளாதார அறிக்கையின் பின்னர், இந்த இலையுதிர் கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.

கோடைகால விடுமுறைக்கு முன்னர், வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்குமாறு Liberal அரசாங்கத்தை Conservative கட்சி வலியுறுத்தியது.

வெள்ளிக்கிழமை (22)  செய்தியாளர்களிடம் பேசிய Conservative தலைவர் Pierre Poilievre, அரசாங்கத்தின் செலவு உறுதிப்பாடுகளை விமர்சித்தார்.

Related posts

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

Gaya Raja

153 million அடையாள அட்டைகள் திருட்டு: அமெரிக்க FBI விசாரணையை தீவிரமாக கண்காணிக்கும் RCMP!

Lankathas Pathmanathan

Leave a Comment