தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபர் கைது

நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபரை சனிக்கிழமை (05) காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டார் எனவும் இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து Ottawa காவல்துறையின் குற்றவியல் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என தெரியவருகிறது.

குறிப்பிட்ட  நபர் ஆயுதம் ஏந்தி இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் விடுத்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் மேல்சபை உறுப்பினர்கள், அவர்களின் ஊழியர்களின் அலுவலகங்கள் உள்ளன.

பொதுத் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் விவாதம்

Lankathas Pathmanathan

Manitoba விபத்தில் காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

Lankathas Pathmanathan

சீக்கிய தலைவர் கொலை வழக்கு முக்கியக் குற்றவாளி குறித்து தகவல் வழங்கினால் $1 மில்லியன் வெகுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment