தேசியம்
செய்திகள்

அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை நீக்க கனடா முடிவு?

சுதந்திர வர்த்தக விதிகளில் உள்ளடங்கும் அமெரிக்க பொருட்கள் மீதான பல வரிகளை நீக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கனடிய பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

CUSMA எனப்படும் கனடா – அமெரிக்கா – Mexico வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் அமெரிக்க பொருட்கள் மீதான பல வரிகள் நீக்கப்படும் என Mark Carney கூறினார்.

தடைபட்டுள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை “தீவிரப்படுத்த” அமெரிக்க ஜனாதிபதியுடன் உடன்பட்ட பின்னர் இந்த அறிவித்தலை Mark Carney வெளியிட்டார்.

இந்த மாற்றம் September 1-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பிரதமர் கூறினார்.

கனடாவின் இந்த முடிவை வரவேற்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையில் வியாழக்கிழமை (21)  உரையாடல்  ஒன்று நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment