September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கான தேவை இல்லை: Mexico ஜனாதிபதி

கனடாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கான தேவை இல்லை என Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum தெரிவித்தார்.

கனடிய நிதி அமைச்சர் Francois-Philippe Champagne, வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோரை சந்தித்த பின்னர் இந்த கருத்தை அவர் கூறினார்.

அமைச்சர்கள் இருவரும் செவ்வாய் (05), புதன் (06) கிழமைகளில் Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum, அரசாங்க அதிகாரிகளுடன் Mexico நகரில் இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர், கனடாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை Mexico ஜனாதிபதி புதன்கிழமை நிராகரித்தார்.

கனடிய அரசாங்க அமைச்சர்களுடனான சந்திப்புகளை பயனுள்ளது என அவர் வர்ணித்தார்.

கனடாவுடன் நேரடி வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்ததாக Claudia Sheinbaum கூறினார்.

கனடிய பிரதமர் நேரடி பேச்சுவார்த்தைக்காக விரைவில் Mexico பயணிப்பார் என Mexico ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

ஆனால் அந்த பயணத்திற்கான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

Related posts

World Series பட்டத்தை தவற விட்ட Blue Jays!

Lankathas Pathmanathan

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment