தேசியம்
செய்திகள்

அமெரிக்க மாநிலமாக இல்லாமல் கனடா அதன் நன்மைகளை பெற விரும்புகிறது?

கனடா, ‘உண்மையில் ஒரு அமெரிக்க மாநிலமாக இல்லாமல்’, அதன் ‘நன்மைகளை’ பெற விரும்புகிறது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

கனடா, அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து புதிய வரிகள் அமுலுக்கு வந்ததற்கும் பின்னர் Donald Trump முதல் தடவையாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது ‘சமூக வலைத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிட்ட ஒரு சுருக்கமான பதிவில், அவரது கருத்துக்கள் வெளியாகின.

அமெரிக்க விவசாயிகள் மீது பல ஆண்டுகளாக “மிகப்பெரிய அளவிலான வரிகளை” விதித்ததாக கனடா மீதும் Donald Trump தனது அறிக்கையில் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துகளுக்கு கனடா அரசாங்கத்திடம் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் வெளியாகவில்லை.

2025-இல் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்ததிலிருந்து, கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற வேண்டும் என Donald Trump தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

Donald Trump நிர்வாகம் “ஏற்றுக்கொள்ள முடியாத” கோரிக்கைகளை முன் வைத்ததை தொடர்ந்து, கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சு வார்த்தையிலிருந்து விலகி கொண்டதாகப் பிரதமர் Mark Carney செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

September 8 முதல் அமெரிக்க பொருட்கள் மீது சமமான மதிப்பிலான பதிலடி வரி விதிப்புகளை தனது அரசாங்கம் அமுல்படுத்தும் எனவும் அவர் அறிவித்தார்.

Related posts

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment