GTA முழுவதும் அரங்கேறிய வன்முறை வாகன கடத்தல் குழு குறித்த விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் 128 கடுமையான குற்ற சாட்டுகள் பதிவாகின.
இதில் Toronto பெருநகரப் பகுதி முழுவதும் வன்முறை மூலம் ஆடம்பர வாகனங்களை கொள்ளையடித்து வந்த ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைந்த குற்றவியல் சதி குழுவினரை காவல்துறையினர் முறியடித்தனர்.
Peel பிராந்திய காவல்துறையினர் Project High Guard என்ற 8 மாத கால அவசர உளவுத்துறை தணிக்கை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன் மூலம் $1.4 மில்லியன் மதிப்புள்ள 15 சொகுசு வாகனங்கள், கறுப்புச் சந்தை துப்பாக்கிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விசாரணையில் 10 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Peel பிராந்திய காவல் துறைத் தலைவர் நிஷான் துரையப்பா திங்கட்கிழமை (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த கும்பல் கடந்த June 2025 முதல் April 2026 வரையிலான கால பகுதிகளுக்கு இடையே 21 வன்முறைக் வாகன கடத்தல்களை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது.
இந்த வாகனங்களில் பயணித்த பயணிகள் உட்பட மொத்தம் 40-க்கும் மேற்பட்டோர் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு, கொடூரமான உடல் ரீதியான வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் அதிரடி வேட்டையில் $1.4 மில்லியன்மதிப்புள்ள 15 சொகுசு வாகனங்கள் மீட்கப்பட்டன.
இதில் ஒரு வாகனம் Montreal துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கறுப்புச் சந்தையில் கடத்துவதற்காக தயாராக இருந்த போது கையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுமட்டுமின்றி, 4 சட்டவிரோத துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
September 3 அன்று Ontario மாகாணக் காவல் துறை (OPP), Toronto, Halton Hills, Hamilton காவல்துறையினர் ஒன்றிணைந்து நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையின் மூலம் 10 பேர் கைதாகினர்.
இந்த வன்முறைக் கும்பல் சிறுவர்களைக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைதாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள்:
- Halton HIlls நகரை சேர்ந்த Tayvien Coley – 19 வயது – 44 குற்றச்சாட்டுகள்
- Brampton நகரை சேர்ந்த Shan Dhindsa – 21 வயது – 20 குற்றச்சாட்டுகள்
- Caledon நகரை சேர்ந்த Ekamveer Randhawa – 20 வயது – 19 குற்றச்சாட்டுகள்
- Brampton நகரை சேர்ந்த Aryan Deol – 20 வயது – 10 குற்றச்சாட்டுகள்
- Brampton நகரை சேர்ந்த Manavjot Dhaliwal – 24 வயது – 8 குற்றச்சாட்டுகள்
- Oakville நகரை சேர்ந்த Parth Sharma – 21 வயது – 4 குற்றச்சாட்டுகள்
- Brampton நகரை சேர்ந்த Madhumeet Randhawa – 37 வயது – 1 குற்றச்சாட்டு
- Brampton நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 17 வயது சிறுவன் – 17 குற்றச்சாட்டுகள்
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், காவல்துறையினரின் தொடர் நடவடிக்கைகளால் Peel பிராந்தியத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிரடியாக குறைந்துள்ளதாக Peel காவல் துறைத் தலைவர் நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
