தேசியம்
செய்திகள்

கனடிய நகரங்களில் அமெரிக்க ஜனாதிபதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தலைநகர் Ottawa-வில் நடைபெற்றது.

ஜனாதிபதி Donald Trump-பின் எதிர்ப்பாளர்கள் Ottawa-வில்  உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த வார இறுதியில் அமெரிக்க நகரங்களில் நடைபெறும் மிகப்பெரிய “No Kings” ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை (14)  நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் பாசிச எதிர்ப்பு, ஜனநாயக ஆதரவு உணர்வுகளை வெளிப்படுத்தும் பதாகைகளுடன் கனடிய கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

Toronto, Vancouver உள்ளிட்ட ஏனைய கனடிய நகரங்களிலும் இது போன்ற பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (15), Alberta-வில் ஆரம்பமாகி நடைபெறும் மூன்று நாள் G7 உச்சி மாநாட்டில் Donald Trump  கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் கனடிய நகரங்களில் நடைபெறுகின்றன.

Related posts

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது

Lankathas Pathmanathan

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment