தேசியம்
செய்திகள்

ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான Tel Aviv கட்டிடத்திலிருந்து கனடிய தூதரக ஊழியர் ஒருவர் மீட்கப்பட்டார்!

ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான Tel Aviv கட்டிடத்திலிருந்து கனடியர் ஒருவர் மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

Tel Aviv-வில் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்திலிருந்து கனடிய தூதரக ஊழியர் ஒருவர் மீட்கப்பட்டார்.

கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சனிக்கிழமை  (14) இதனை உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன்,  அனிதா ஆனந்த் உரையாடியுள்ளார்.

ஈரானிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில்  தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை கனடா உறுதியாக ஆதரிக்கிறது என இந்த உரையாடலின் போது அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது, ஈரானின் சமீபத்திய தாக்குதல்களின் போது கட்டிடம் ஒன்றில் சிக்குண்டிருந்த கனடியரை வெளியேற்ற உதவிய இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்களுக்கு அனிதா ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

Related posts

வட அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் குறித்து கனடா – மெக்சிகோ தலைவர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan

இலக்கிய நோபல் பரிசு பெற்ற Alice Munro காலமானார்

Lankathas Pathmanathan

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரை!

Gaya Raja

Leave a Comment