September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடா-அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைகின்றன!

பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த கனடா-அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் தீவிரமடைகின்றன.

அமெரிக்காவும் கனடாவும் அண்மைய வாரங்களில் பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இரு தரப்பினருக்கும் இடையில் இது குறித்த வரவுகள் கைமாற்றப்பட்டுள்ளன.

அத்தகையதொரு  ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நேரடியாக கையெழுத்திட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் நடைபெறும் என்பதற்கு வெளிப்படையான உத்தரவாதங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை மேசையில் கனடிய, அமெரிக்க தரப்புகளுக்கு இடையே ஆவணங்கள் பரிமாறப்படுவதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் இந்த ஆவணங்களின் உள்ளடக்கங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

இதனை ஒரு “சாதாரண பேச்சுவார்த்தையின் நகர்வு” என விவரித்த அந்த அதிகாரி, அரசாங்கம் “பொதுவில் பேச்சுவார்த்தை நடத்தாது” எனவும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பல வெளிப்புற காரணிகள் ஒரு காலவரிசை குறித்த எந்தவொரு உறுதிப்பாட்டை கணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்துத் தெரிவிக்க நிதியமைச்சர் François-Philippe Champagne மறுத்துள்ளார்.

இரு நாட்டின் தலைவர்களும் சமீபத்திய வாரங்களில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொழில்துறை அமைச்சர் Melanie Joly கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.

கடந்த February மாதம் முதல் அமெரிக்காவும் கனடாவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன.

ஜனாதிபதி Donald Trump கனடியப் பொருட்களுக்கு தொடர்ச்சியான வரிகளை அமுல்படுத்த ஆரம்பித்ததில் இருந்து இந்த வர்த்தகப் போர் ஆரம்பித்தது.

பல தசாப்த கால கனடா-அமெரிக்க உறவு முடிந்து விட்டது என இந்த வரிகள் குறித்து பிரதமர் Mark Carney கூறிவருகிறார்.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய பொருளாதார, பாதுகாப்பு உறவு சாத்தியமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related posts

நிலநடுக்க மண்டலத்தில் உள்ளவர்களிடமிருந்து குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு

Lankathas Pathmanathan

ATM கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment