அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வருவது புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.
May மாதத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக, கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதல் கட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் கனடியர்கள் மீண்டும் கனடாவுக்கு திரும்பும் பயணங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வருடம் 24.2 சதவீதம் குறைந்துள்ளது.
அதேவேளை அமெரிக்காவிலிருந்து வாகனங்கள் மூலம் கனடியர்கள் மீண்டும் கனடாவுக்கு திரும்பும் பயணங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வருடம் 38.1 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா ஜனாதிபதியின் வரிவிதிப்பு, கனடாவை 51 ஆவது மாநிலமாக மாற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
இதேவேளை அமெரிக்கர்கள் விமானம் மூலம் கனடாவுக்குள் பயணம் மேற்கொள்வது ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வருடம் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்கர்கள் வாகனங்கள் மூலம் கனடாவுக்குள் பயணம் மேற்கொள்வது ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வருடம் 8.4 சதவீதம் குறைந்துள்ளது.