G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Alberta-வில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் Mohammed bin Salman அழைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் இந்த அழைப்பை Mohammed bin Salman ஏற்றுக்கொண்டாரா என்பது இன்னும் தெரியவில்லை.
கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த வாரம் G7 உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கனடிய பிரதமர் Mark Carney தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
G7 உச்சி மாநாடு June 15 முதல் 17 வரை Alberta மாகாணத்தில் நடைபெறுகிறது.
இந்த வருடாந்த உச்சிமாநாட்டிற்கு ஏனைய உலக நாடுகளின் தலைவர்களை அழைப்பது வழக்கமான ஒரு நடைமுறையாகும்.
மத்திய கிழக்கு அரசியல் நகர்வுகளில் சவுதி அரேபியா ஒரு முக்கிய பங்காளியாக கணிக்கப்படுகிறது.