தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர்

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Ontario Liberal மாகாண சபை உறுப்பினர் Ted Hsu தலைமை பதவிக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Kingstonனில் தனது பிரச்சாரத்தை Ted Hsu ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பித்தார்.

Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது.

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie தயாராகி வருகிறார்.

Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்.

Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Torontoவின் புதிய நகர முதல்வர் Olivia Chow

Lankathas Pathmanathan

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பிராந்திய அணுகுமுறை சாத்தியமானது: Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment