தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் வெள்ளியன்று சந்திப்பு

கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் வெள்ளிக்கிழமை (05) சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

பிரதமர் Mark Carney, ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையில் சந்திப்பு John F. Kennedy மையத்தில் நடைபெற்ற ஏற்பாடாகியுள்ளது.

இந்த சந்திப்பை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

FIFA உலகக் கோப்பை தொடர்பான நிகழ்வுகளுக்கு Washington பயணிக்கும் Mark Carney அங்கு அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கிறார்.

Ontario மாகாண அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கட்டண எதிர்ப்பு விளம்பரம் காரணமாக Donald Trump கடந்த October மாதம் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்தி இருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்தது.

FIFA உலகக் கோப்பை நிகழ்வில் பங்கேற்கும் Mexican ஜனாதிபதியையும் கனடிய பிரதமர் சந்திப்பார் என தெரியவருகிறது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காணொளி குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan

அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை கனடாவில் கைது

Lankathas Pathmanathan

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Leave a Comment