தேசியம்
செய்திகள்

பொது சுகாதார சேவைகளை தனியாருக்கு விரிவு படுத்தும் Ontario திட்டம் குறித்து கேள்வி

பொது சுகாதார சேவைகளை இலாப நோக்கற்ற சமூக அறுவை சிகிச்சை மையங்களுக்கு மாற்றுவது கவலைகளை எழுப்புகிறது என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

Ontario மாகாணத்தின் தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான நகர்வு குறித்து செவ்வாய்க்கிழமை (17) அமைச்சர் Duclos கருத்து தெரிவித்தார்.

பொது சுகாதார சேவைகளை தனியாருக்கு விரிவு படுத்தும் திட்டம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

அறுவை சிகிச்சை பின்னடைவை குறைப்பதற்காக தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் திங்கட்கிழமை (16) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவித்தல் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், அறுவை சிகிச்சை பின்னடைவுகளை அகற்றவும் உதவும் என Ontario மாகாண சுகாதார அமைச்சர் Sylvia Jones நம்பிக்கை தெரிவித்தார்

Related posts

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்க கனடாவில் மன்னர்!

Lankathas Pathmanathan

முன்கூட்டிய தேர்தலை நடத்த தயாராகும் Doug Ford

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

Leave a Comment