தேசியம்
செய்திகள்

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Saskatchewan மாகாணத்திற்கு இந்த வாரம் பிரதமர் மேற்கொண்ட பயணம் குறித்து அந்த மாகாண முதல்வருக்கு தெரிவிக்காததற்காக பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த பயணம் குறித்து தனக்குத் தெரிவிக்காததற்காக பிரதமர் Justin Trudeauவின் அலுவலகம் மன்னிப்பு கேட்டதாக முதல்வர் Scott Moe கூறினார்.

Trudeau திங்கட்கிழமை (16) Saskatoon நகரில் ஒரு செயலாக்க ஆலையை பார்வையிட்டார்.

இதில் அந்த நகர முதல்வர் Charlie Clark பிரதமருடன் உடனிருந்தார்.

ஆனாலும் அழைப்பிதழ் பட்டியலில் மாகாண முதல்வர் இருக்கவில்லை.

இந்த விடயம் குறித்து தனது ஏமாற்றத்தை முதல்வர் வெளியிட்டார்.

இதனை இது ஒரு தவறவிடப்பட்ட சந்தர்ப்பம் எனவும் முதல்வர் Moe கூறினார்.

Related posts

COVID விதிகள் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை: போக்குவரத்து அமைச்சர்

Lankathas Pathmanathan

இடைக்கால நெறிமுறை ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம் கோரும் கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment