September 11, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்

Ontarioவில் இன்று சனிக்கிழமை தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. சனிக்கிழமை 2,453 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். January மாதம் 22ஆம் திகதி 2,662 தொற்றுக்கள் பதிவாகியதிலிருந்து அதிக ஒற்றை நாள் தொற்றுகள் இதுவாகும். அதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் Ontarioவில் அதிகரித்து வருகின்றது.

Ontarioவில் வெள்ளிக்கிழமை 2,169, வியாழக்கிழமை 2,380, புதன்கிழமை 1,571 என தொற்றுக்களின் எண்ணிக்கை பதிவானது. மாகாணத்தின் ஏழு நாள் சராசரி இப்போது 1,944 ஆக உள்ளது.Ontarioவில் தொற்றால் 7,308 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்கள் வார இறுதிக்குள் வெளியேற்ற முடிவு!

Lankathas Pathmanathan

Toronto, Vancouver வீடு விற்பனை கடந்த ஆண்டை விட குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment