தேசியம்
செய்திகள்

இடியுடன் கூடிய பலத்த காற்றின் சேதங்களில் இருந்து மீள்வதற்கு ஆதரவு வழங்க தயார்: பிரதமர் Trudeau

சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீள்வதற்கு தேவைப்பட்டால் ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

தெற்கு Ontarioவிலும் Quebecகின் சில பாகங்களிலும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்தது.

இந்த சேதங்களில் இருந்து மீள்வதற்கு Ontario, Quebec மாகாணங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (22) மாலை வரை துப்புரவுப் பணிகள் தொடர்ந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மின்சாரத்தை மீட்டெடுக்க உழைக்கும் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.

Ontarioவில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறை கூறுகிறது.

Quebecகில் பெண் ஒருவர், Ottawa ஆற்றில் படகு கவிழ்ந்ததில் இறந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று இறப்புகள் உறுதி செய்யப்பட்டன.

Ottawaவில் உள்ள அனைவருக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும் என நகர அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த புயலால் 200 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக Hydro Ottawa தெரிவித்துள்ளது.

ஞாயிறு மாலை வரை 177,546 வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் 575க்கும் மேற்பட்ட செயலிழப்புகளை Hydro Ottawa அறிவிக்கின்றது.

சுமார் 370,000 வாடிக்கையாளர்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதை இருப்பதை Hydro Quebecகின் இணையதளம் உறுதிப்படுத்துகிறது.

Related posts

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!

Gaya Raja

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!