கனடாவின் குடியேற்ற இலக்குத் திட்டத்தை குடியேற்றத் துறை அமைச்சர் Lena Metlege Diab நியாயப்படுத்தினார்.
Conservative கட்சியின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், கனடாவின் குடியேற்ற இலக்குத் திட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் Lena Metlege Diab நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் கனடாவுக்கு ஏற்ற, நிலையான, நீடித்த, கணிக்கக்கூடிய எண்ணிக்கையை வழங்கும் வலுவான, பொறுப்பான திட்டம் எங்களிடம் உள்ளது என குடியுரிமை, குடியேற்றத்திற்கான நிலைக்குழுவில் வியாழக்கிழமை (26) பங்கேற்றபோது அவர் தெரிவித்துள்ளார்.
Mark Carney அரசின் குடியேற்றத் திட்டம் என்பது ஒரு பொருளாதாரத் திட்டம் எனவும் அமைச்சர் Lena Metlege Diab விளக்கமளித்தார்.
July 2026 நிலவரப்படி கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 6.7 சதவீதமாக இருந்த தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை, 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5.5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் 380,000 நிரந்தர வதிவிட தாரர்களை ஏற்றுக்கொள்வதுடன், ஏற்கனவே கனடாவில் உள்ள 282,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு சுமார் 662,000 நிரந்தர வதிவிட தாரர்களை சேர்க்கும் அரசின் திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டி Conservative கட்சி முன்வைத்த எதிர்ப்பு தீர்மானம் புதன்கிழமை (25) நடைபெற்ற வாக்கெடுப்பில் கட்சி அடிப்படையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
