November 28, 2026
தேசியம்
செய்திகள்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட TDSB உறுப்பினர்களைச் சந்திக்க கல்வி அமைச்சர் Paul Calandra மறுப்பு?

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Toronto மாவட்டக் கல்வி சபை (TDSB) உறுப்பினர்களை சந்திக்க கல்வி அமைச்சர் மறுத்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Toronto மாவட்டக் கல்வி சபையின் (TDSB) 12 உறுப்பினர்களையும் நேரில் சந்தித்துப் பேச Ontario மாகாண கல்வித் துறை அமைச்சர் Paul Calandra மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12  TDSB கல்விச் சபையின் உறுப்பினர்களில் தமிழர்களான அனு ஸ்ரீஸ்கந்தராஜா, ரவிச்சா இரவீந்திரன் ஆகியோர் அடங்குகின்றனர்.

கல்விச் சபையின் மீதான மாகாண அரசின் நேரடி மேற்பார்வையை முடிவுக்குக் கொண்டுவருவது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் நிர்வாக அதிகாரங்களை மீண்டும் ஒப்படைப்பது குறித்து நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என 12 உறுப்பினர்களும் இணைந்து இந்த மாத ஆரம்பத்தில் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சரின் அலுவலகம், அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் நேரம் இன்மை காரணமாக இந்த சந்திப்பு கோரிக்கையை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.

அமைச்சரின் இந்தப் பதில் தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என கூறிய  Spadina-Fort York , Toronto-Danforth கல்விச் சபை உறுப்பினர் Jennifer Volk இந்த விடயத்தில் தனது அதிருப்தியை பதிவு செய்தார்.

இதில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து 12 உறுப்பினர்களும் தற்போது ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்விச் சபையின் நிதி நிலையை சீரமைப்பதாக கூறி, கடந்த கோடையில் முதல்வர் Doug Ford அரசு TDSB-யின் கட்டுப்பாட்டைத் தன் வசப்படுத்தியது.

முன்னாள் Metrolinx ஆலோசகரான Rohit Gupta மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுவாகக் கல்விச் சபையின் கொள்கை மாற்றங்கள், வரவு செலவுத் திட்டத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்பினர்களின் அதிகாரங்கள் தற்போது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

மாகாண மேற்பார்வையின் கீழ் கல்விச் சபை வந்ததிலிருந்து தங்களுக்குத் தகவல் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்:

இந்த நிலையில் கடந்த மாதம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாகாண அரசு அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாடசாலை நிகழ்வுகள்,வாரியக் கூட்டங்களில் பங்கேற்பது, அதிகாரப்பூர்வ முறையில் வாக்காளர்கள், பாடசாலை முதல்வர்கள், ஊழியர்களுடன் தொடர்பு கொள்வது, செய்திமடல்கள் வெளியிடுவது, கல்விச் சபையின் வளங்களை பயன்படுத்துவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர தயார்: Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment