November 26, 2026
தேசியம்
செய்திகள்

Ontario வீதிகளில் E-Bike ஓட்டுவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!

Ontario மாகாணத்தில் சில வகை மின்சார மிதி வண்டிகளுக்கு (E-Bikes) ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, காப்பீடு ஆகியன கட்டாயமாக்கப்படுகிறது.

Ontario மாகாண போக்குவரத்து துறை அமைச்சர் Prabmeet Sarkaria வியாழக்கிழமை (26) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த புதிய விதிகள் May 1 முதல் அமுலுக்கு வருகின்றன.

Motor வாகனங்கள் அல்லது Motor Scooter-களைப் போல் செயல்படும் மின்சார மிதி வண்டிகளை (E-bikes) கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய கடுமையான விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத மின்சார மிதி வண்டிகளை, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, காப்பீடு இல்லாமல் மாகாண வீதிகளில் இயக்க அனுமதிக்கப்படாது என அமைச்சர் Prabmeet Sarkaria கூறினார்.

2009-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக இந்த விதிமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

Lankathas Pathmanathan

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Lankathas Pathmanathan

Leave a Comment