Toronto நகர மேலாளரும், இரு துணை மேலாளர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
Toronto மாநகர நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நகர முதல்வர் Olivia Chow திங்கட்கிழமை (23) ஒரு அறிக்கையின் மூலம் இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
Toronto மாநகரத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரியான நகர மேலாளர் Paul Johnson, இரண்டு துணை நகர மேலாளர்கள் Jag Sharma, Kate Bassil ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Toronto-வின் புதிய இடைக்கால நகர மேலாளராக Stephen Conforti நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகின்றன.
நகர மேலாளர் பொறுப்பிலிருந்து விடைபெறும் Paul Johnson-னின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு Olivia Chow தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Toronto மாநகர நிர்வாகத்தை நான்கு முக்கிய சேவை பிரிவுகளின் கீழ் மறுசீரமைக்கும் முடிவின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக Oliva Chow அலுவலகம் தெரிவித்தது.
தனது முதல் பதவிக்கால வெற்றிகளின் மூலம், பொதுச் சேவையில் ஒத்துழைப்பு, புத்தாக்கம், செயல்திறனை மேம்படுத்தவும், சேவைகளை மேலும் எளிமைப்படுத்தவும் நிர்வாக மாற்றங்களுக்கான வாய்ப்புகளை கண்டறிந்துள்ளதாக Oliva Chow இந்த முடிவு குறித்த தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
