தேசியம்
செய்திகள்

British Columbiaவில் 215 சடலங்கள் கண்டுபிடிப்பு: உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ;பிரதமர் உறுதி

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் 215 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உறுதியான நடவடிக்கைகளுக்கு பிரதமர் Justin Trudeau உறுதியளித்துள்ளார்.

முன்னாள் குடியிருப்புப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு பழங்குடி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குடியிருப்பு பாடசாலையில் தப்பிப்பிழைத்தவர்களிடமிருந்து ஒரே மாதிரியான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பலர் இதுபோன்ற தேடல்களை ஏனைய குடியிருப்பு பாடசாலையின் தளங்களில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பழங்குடி சமூகங்கள் வருத்தத்திலும், பதில்களுக்கான கோரிக்கையிலும் நாங்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை ஆராந்து வருவதாக திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Trudeau கூறினார். தனது அமைச்சர்களுடன் இந்த விடயம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் Ottawaவில் அமைதி கோபுரத்தின் மேலே உள்ள கனடிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் அமைதி கோபுரத்திலும் அனைத்து மத்திய அரசின் கட்டிடங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்குமாறு கேட்டுள்ளதாக பிரதமர் Trudeau தனது Twitter மூலம் தெரிவித்தார் . Ontario, British Colombia உட்பட பல மாகாண அரசாங்கங்களும், நகர சபைகளும் தனது கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றன.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!