தேசியம்
செய்திகள்

Peel பிராந்திய காவல்துறை தலைவர் இலங்கைக்கு பயணம்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடிய தமிழரான Peel பிராந்திய காவல் துறையின் தலைவர் நிசான் துரையப்பா இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

December மாதம் 29ஆம் திகதி இலங்கை காவல் கண்காணிப்பாளர் Deshabandu Tennakoon உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நிசான் துரையப்பா சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்தியை நேரில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக நிசான் துரையப்பா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நிசான் துரையப்பா Peel பிராந்திய காவல் துறையின் தலைவராக October 2019 முதல் பதவி வகிக்கின்றார்.

இவர் முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார்

நிசான் துரையப்பா வட அமெரிக்காவில் உள்ள தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த மிக மூத்த காவல்துறை அதிகாரி ஆவார்

இவரது தலைமை பணி ஒப்பந்தத்தை 2028 வரை நீட்டிப்பதாக Peel பிராந்திய காவல்துறை சேவைகள் வாரியம் கடந்த வாரம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது

நிசான் துரையப்பா 2022 முதல் 2023 வரை Ontario காவல் துறைத் தலைவர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

Related posts

கடவுச் சீட்டுக்காக எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் கனடா!

Gaya Raja

முதலாவது முதல் குடியின பிரதமராகும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment