November 15, 2025
தேசியம்
செய்திகள்

North Bay அருகே வீதி விபத்து ; தமிழ் யுவதி மரணம்

North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் தமிழ் யுவதி ஒருவர் மரணமடைந்தார்.

Scarboroughவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்ற தமிழ் யுவதி இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார். நெடுந்தெரு 11இல் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.  

நெடுஞ்சாலையில் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தமிழ் யுவதி பயணித்த வாகனம் அதில் மோதியுள்ளது.  இதில் இரண்டு வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.

இரண்டாவது வாகனத்தில் பயணித்த தமிழ் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த தமிழ் யுவதி மறுநாள் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

Related posts

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Lankathas Pathmanathan

கனடிய டொலரின் பெறுமதி நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment