தேசியம்
செய்திகள்

தமிழ் இளைஞனின் கொலை குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது

Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை இரண்டு பதின்ம வயதினர்கள் எதிர்கொள்கின்றனர்.

கடந்த வாரம் வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த நிலையில் காணப்பட்டதை  அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை (21) பிற்பகல் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதான டானியல் அமலதாஸ் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது செய்யப்பட்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (29) அறிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இவர்கள் இவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

British Colombiaவில் மீண்டும் அதிகரிக்கும் நாளாந்த COVID தொற்று எண்ணிக்கை!!

Gaya Raja

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

Andrea Horwath அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment