தேசியம்
செய்திகள்

உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் கண்டனம்

உக்ரைன் தலைநகர் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் Mark Carney கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்த தாக்குதல் என் பிரதமர் கூறினார்.

வியாழக்கிழமை (28) அதிகாலை உக்ரைன் தலைநகர் Kyiv மீது ரஷ்யா ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இதில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் – 48 பேர் காயமடைந்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதரக அலுவலகங்களுக்கு இந்தத் தாக்குதலினால் சேதம் விளைவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளும் அடங்குவர் என Kyiv நகர நிர்வாகத் தலைவர் தெரிவித்தார்.

இதில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் Mark Carney, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகிய இருவரும் இந்தத் தாக்குதலை கண்டித்தனர்.

ரஷ்யா 598 ஆளில்லா விமானங்கள், பல்வேறு வகையான 31 ஏவுகணைகள மூலம் தாக்குதல் மே றக்ண்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.

மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், Kyiv  மீது ரஷ்யா நடத்திய முதல் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

Related posts

Ontarioவில் தடுப்பூசிகளை பெறுவதற்கான முன்பதிவுகள் March மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் ஆறாவது பதக்கம்

Lankathas Pathmanathan

2026 Paralympic: முதலாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment