November 18, 2026
தேசியம்
செய்திகள்

கனடா – அமெரிக்கா உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரம்: வாரந்தோறும் ஆலோசனை என மூத்த அதிகாரிகள் தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்வாகத்துடன் கனடிய அரசின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது என கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc தனது அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் வாரந்தோறும் முறைப்படி ஆலோசனை நடத்தி வருவதாக மூன்று மூத்த கனடிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை முறையான வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இறுதி செய்யப்படாத போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகளை களையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த மாத ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer, வர்த்தகச் செயலர் Howard Lutnick ஆகியோருடன் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைச்சர் Dominic LeBlanc வழக்கமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கனடிய அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச வர்த்தகக் குழுவில் பேசிய அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

கியூபாவிற்கு $8 மில்லியன் உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

Leave a Comment