September 30, 2026
தேசியம்
செய்திகள்

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

ரம்ஜான் பண்டிகையின் போது ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கனடா கண்டித்துள்ளது.

ஜெருசலேம் மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது புதன்கிழமை (05) இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல் குறித்த ஒளிப்படங்கள் வெளியாகிய நிலையில் இந்த வன்முறைக்கான தனது கண்டனத்தை கனடிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலை பிரதமர் Justin Trudeau கண்டித்தார்.

புனிதத் தலங்களின் புனிதம் மதிக்கப்பட வேண்டும் என தனது கண்டனத்தை புதன்கிழமை Twitter மூலம் கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly பதிவு செய்தார்.

சமாதானத்திற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு பங்களிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை கனடா எதிர்க்கும் எனவும் அமைச்சர்குறிப்பிட்டார்.

ஆனாலும் இந்த தாக்குதல் குறித்த தனது அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விடயத்தில் கனடா அறிக்கைகளை மாத்திரம் வெளியிடுவதுடன் இருந்து விட முடியாது என அவர் கூறினார்.

கண்டனத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகளை தாண்டி வெளியுறவு அமைச்சர் Melanie Joly, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்தார்.

Related posts

இஸ்ரேலின் “சட்டவிரோத பிரசன்னத்தை” நிறுத்த கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது கனடா!

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

கனடா – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?

Lankathas Pathmanathan

Leave a Comment