தேசியம்
செய்திகள்

நாடு திரும்பும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கனேடியர்கள் ?

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கனேடியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர்

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக Al-Roj திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 கனேடியர்கள் மீண்டும் கனடாவுக்கு திரும்புவதாக தெரியவருகிறது.

ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் செவ்வாய்கிழமை (04) மாலை தடுப்பு முகாமில் இருந்து கனேடிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த ஒரு வாரமாக இந்த தடுப்பு முகாமில் இருந்த கனேடியர்கள் பாதுகாப்பு மதிப்பீடுகளை RCMP முன்னெடுத்து வந்தது.

19 கனேடியர்கள் Calgary, Edmonton, Toronto, Montreal ஆகிய நகரங்களை வந்தடைய உள்ளனர்.

ஆனாலும் திருப்பி அனுப்பப்படும் கனடியர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட சிறியதாகும்.

முகாமை விட்டு வெளியேறும் கனேடியர்களில் 38 வயதான Quebec பெண்ணும் அவரது ஆறு குழந்தைகளும் அடங்குகின்றனரா என்பது தெரியவரவில்லை.

அவரது குழந்தைகள் கனடா திருப்பி அனுப்ப தகுதியுடையவர்கள் என வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் அறிவுறுத்தியது.

ஆனாலும் தாயாரின் பாதுகாப்பு மதிப்பீடு முழுமையடையாததால் அவர் தனது குழந்தைகளுடன் பயணிக்க முடியாது எனவும் கடந்த வாரம் அறிவுறுத்தப்பட்டது.

தாயார் தனது குழந்தைகளை தனியே முகாமை விட்டு வெளியேற அனுமதிதுள்ளதாக அவரது வழக்கறிஞர் Lawrence Greenspon புதன்கிழமை (05) தெரிவித்தார்.

ஆனால் அவர்களுடன் தானும் பயணிக்க தாயார் விரும்புவதாக வழக்கறிஞர் கூறினார்.

இந்த நிலையில் தாயுடன் ஆறு குழந்தைகளையும் மீண்டும் அழைக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு Lawrence Greenspon கனடிய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

COVID தளர்வுகளுக்கு உகந்த தருணம் இதுவல்ல: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

அதிகரித்த வெப்பம் காரணமாக British Colombiaவில் 486 திடீர் மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment