Ajax நகரசபையில் முதல் தமிழராக ரஞ்சித் பரணிவாசகம் பதவியேற்றார்.
Ajax நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரான ரஞ்சித் பரணிவாசகம், நகரின் இரண்டாம் வட்டாரத்திற்கான பிராந்திய சபை உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் Ajax நகர சபைக்கு ரஞ்சித் பரணிவாசகம் தேர்தெடுக்கப்பட்டார்.
கடந்த October 26 நடைபெற்ற Toronto நகரசபைத் தேர்தலில் ரஞ்சித் பரணிவாசகம் 2,793 வாக்குகளைப் (24.3%) பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
தமிழ்-கனடிய நகரசபை உறுப்பினரான அவர் தனது புதிய பதவி காலத்திற்கான சத்திய பிரமாணத்தை திங்கட்கிழமை (16) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
Ajax நகரில் அமைந்துள்ள Audley பொழுதுபோக்கு மையத்தில் இந்தப்
பதவியேற்பு வைபவம் நடைபெற்றது.
இதன் மூலம் Ajax நகர சபையில கால்பதிக்கும் முதலாவது தமிழ்-கனடிய மக்கள் பிரதிநிதி என்ற பெருமையை ரஞ்சித் பரணிவாசகம் பெற்றுள்ளார்.
