உலகளவில் முடங்கிய Microsoft சேவைகள் காரணமாக கனடாவில் மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், புகையிரத சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Microsoft தளங்களில் வியாழக்கிழமை (12) ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கனடாவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக Microsoft Outlook,Teams, Copilot, Microsoft 365 ஆகிய சேவைகள் முடங்கியதால் கனடாவின் முக்கிய பொதுச் சேவைகள் ஸ்தம்பித்தன.
இதன் எதிரொலியாக மருத்துவமனைகளில் Code Grey அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
Toronto St. Michael’s மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளை உள்ளடக்கிய Unity Health Toronto கட்டமைப்பில் இந்த சேவை முடக்கம் காரணமாக Code Grey அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
Sunnybrook), UHN மருத்துவமனைகளிலும் ஊழியர்களால் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாத நிலை தோன்றியது.
இருப்பினும், நோயாளிகளுக்கான நேரடி மருத்துவச் சிகிச்சைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளுக்கு அவர்களின் புகையிரத பயணம் குறித்த மின்னஞ்சல் அறிவிப்புகள் சென்றடையாது என VIA புகையிரத நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களின் புகையிரத நேரங்களை அறிய இணையதள tracker அல்லது SMS அறிவிப்புகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Toronto பல்கலைக்கழகம், Seneca Polytechnic, George Brown Polytechnic ஆகிய கல்வி நிறுவனங்களின் மின்னஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டன.
Toronto நகராட்சியின் சில சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டது.
Bell கனடா உட்பட பல தனியார் நிறுவனங்களிலும் பாதிப்புகள் எதிர்கொள்ளப்பட்டன.
பல பிராந்தியங்களில் உள்ள உள்கட்டமைப்பு server-களில் அதிகப்படியான சுமை ஏற்பட்டது இந்த இணைப்புத் துண்டிப்புக்கு காரணம் என Microsoft நிறுவனம் விளக்கமளித்துள்ளது
